Thursday 15 December 2011

தஞ்சாவூர் வீணை

           தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். 17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடிகிறது. இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.
         சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். பலா மரம் பண்ருட்டி என்ற ஊரில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. அந்த ஊரின் மண் வளம் பலா வளர்வதற்கு ஏற்ற மண்ணாக இருப்பது ஓர் சிறப்பம்சமாகும். தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டை கிராமத்தில் வசிக்கும் மருதமுத்து ஆசாரி என்பவர் சுமார் 20 வருடங்களாக தனியாக வீணை செய்யும் தொழிலைச் செய்து வருகிறார்.  கடினமான வேலையாகிய குடம், தண்டி, யாழித்தலை செய்வது போன்ற வேலைகளை ஆண்கள் செய்கின்றார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன் பிளாஸ்டிக் அட்டை ஒட்டாமல் மான் கொம்பினை இழைத்து குடத்திலும் தண்டியிலும் ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்ததாகவும், தற்போது நவீன தொழில் நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதால் பிளாஸ்டிக் அட்டையை ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்வதாகவும் அகவல் அறியப்பட்டது. 

  
தஞ்சாவூர் வீணை

           யாழித்தலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. தஞ்சாவூரில் வீணை செய்பவர்களுக்கு நாட்டரசன்கோட்டையிலிருந்து யாழித்தலை செய்த கொடுக்கப்படுகிறது. இதன் விலை சுமார்  ரூ.150/-க்கு விற்று விடுவதாக தகவல் அறியப்பட்டது. நாட்டரசன்கோட்டையில் இரண்டுவகையான வீணைகள் செய்யப்படுகின்றன. நாட்டரசன் கோட்டையில் செய்யப்படுகின்ற வீணை சுமார் 5கி.எடைக்கு மேல் இருப்பது இல்லை. அவ்வாறு எடை குறைவாகச் செய்வது இவர்களின் தனிச்சிறப்பாகக் கருதுகின்றனர்.  இவர்கள் செய்கின்ற வீணை வெளிநாடுகளில்  குறிப்பாக சிங்கப்பூரில் சிங்கப்பூரில் நல்ல வரவேற்பு உள்ளது.  இசையில் நாட்டம் கொண்ட பள்ளி மாணவர்களுக்குப் பரிசுப் பொருளாக வீனை அளிக்கப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையின் மூலமாக தமிழக முதலமைச்சர் அறக்கட்டளை இசைப்போட்டியில் வெற்றிப் பெற்றவருக்கு ஒவ்வொரு வருடமும் வீணையைப் பரிசுப் பொருளாக அளிக்கின்றார்கள்.
          




4 comments:

  1. Frontline (Feb 10, 2012)இதழில் The Music of wood என்ற தலைப்பில் தஞ்சாவூர் வீணை தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஜம்புலிங்கம்

    ReplyDelete
  2. The Hindu (Magazine, April 29, 2012, p.4) இதழில் Lion-headed legacy என்ற தலைப்பில் வீணை தொடர்பான ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்பின் அக்கட்டுரையைப் பார்க்க வேண்டுகிறேன். ஜம்புலிங்கம்

    ReplyDelete
  3. இவ்வார 11.7.2012 நாளிட்ட ஆனந்தவிகடன் (என் விகடன்) இணைப்பில் பக்கம் 118இல் நல்லதோர் வீணை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும். ஜம்புலிங்கம்

    ReplyDelete
  4. தயாரிக்கும் இடத்தில் ஒரு வீணை வாங்க வேண்டும்.. உதவுங்களேன்.. 9740926460

    ReplyDelete